×

ஜாக்டோ, ஜியோவுக்கு ஆதரவு மாணவர் அமைப்பு ஆர்ப்பாட்டம்

கரூர், ஜன.30:  கரூர் அரசு கலைக் கல்லூரி எதிரே ஜாக்டோ ஜியோவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் அரசு கலைக் கல்லூரி முன்பாக, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் இந்த அமைப்பை சேர்ந்த மாவட்ட நிர்வாகி சுரேந்தர் தலைமையில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி முன்பாக அமர்ந்து , ஜாக்டோ ஜியோ போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு புறப்பட்டு சென்று சென்றனர்.கரூர் அரசுகலைக்கல்லூரி முன்பு புரட்சிகரமாணவர் இலக்கிய முன்னேற்ற கழகத்தினர்  ஜாக்டோ,ஜியோவுக்கு ஆதரவாக கல்லூரி முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.


Tags : student organization ,
× RELATED டெல்லி ஜே.என்.யு. பல்கலை. மாணவர் அமைப்பு...