×

அரூர் கூட்டுறவு சங்கத்தில் ₹90 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

அரூர்,ஜன.29: அரூர் கூட்டுறவு வேளாண் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் ₹90 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், வாரந்தோறும் திங்கட் கிழமைகளில் பருத்தி  ஏலம் நடைபெற்று வருகிறது. அரூர், கடத்தூர், பொம்மிடி, கம்பைநல்லூர், கோட்டப்பட்டி  உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் பருத்தியை இந்த கூட்டுறவு சங்கத்திற்கு விற்பனைக்கு எடுத்து வருகிறார்கள்.

இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 569 விவசாயிகள் சுமார் 4000ற்கும் மேற்பட்ட பருத்தி மூட்டைகளை எடுத்து வந்தனர். இந்த வாரம் ஆர்சிஎச் ரக பருத்தி குவிண்டால் ₹5509 முதல் 5969 வரையிலும், வரலட்சுமி (டிசிஎச்) ரகம் ₹6609 முதல் 7019 வரை ஏலம் போனது. பருத்தி ஏலம் முடிந்தவுடன் உடனடியாக விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று 4000 மூட்டை பருத்தி ஏலத்திற்கு வந்தது. இதில் ₹90 லட்சம் பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா