×

வண்டி வேடிக்கை நிகழ்ச்சி ஆம்வே கிளிஸ்டெர் ஹெர்பல்ஸ் புதிய பற்பசை அறிமுகம்

சேலம், ஜன.25:  ஆம்வே கிளிஸ்டெர் ஹெர்பல்ஸ் புதிய பற்பசை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நேரடி விற்பனை நிறுவனமான ஆம்வே இந்தியா, தன்னுடைய சமீபத்திய தயாரிப்பான ‘கிளிஸ்டெர் ஹெர்பல்ஸ் பற்பசை’யின் அறிமுகத்தை அறிவித்தது. இதன்மூலம் இந்நிறுவனம் மூலிகை வாய் பராமரிப்பு சந்தையில் நுழைகிறது. உலக அளவில் புகழ் பெற்ற 100 கோடி பிராண்டான கிளிஸ்டெரின் இந்த புதிய மூலிகை வாய் பராமரிப்புத் தயாரிப்பானது, பல மூலிகை உட்பொருள்களைச் சிறந்த சுவை மற்றும் மகிழ்வூட்டும் வண்ணத்துடன் நன்கு கலந்து, எல்லாருடைய சுவை எதிர்பார்ப்புகளுக்கும் பொருந்த செய்கிறது. இந்த புதிய மற்றும் மேம்பட்ட தயாரிப்பின் மூலம், இந்தியாவின் மலர்ந்து வரும் ஐஎன்ஆர் 1980 கோடி வாய் பராமரிப்பு பிரிவை குறி வைக்கிறது ஆம்வே.

 கிளிஸ்டெர் ஹெர்பல்ஸின் அறிமுகத்தை அறிவித்த ஆம்வே, இந்தியாவின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி சந்தீப் ஷா, கிளிஸ்டெர் எங்களுடைய மிகப் புகழ்பெற்ற உலக பிராண்ட்களில் ஒன்றாகும். எங்களுடைய முதன்மை பிராண்டின் நீட்சியாகவும், கிளிஸ்டெர் ஹெர்பல்ஸ் அமைகிறது. எங்களுடைய இந்திய வாடிக்கையாளர்களுக்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆம்வே இந்தியாவின் அழகு, தனிப்பட்ட பராமரிப்பு பிரிவு தலைவர் அனிஷா ஷர்மா கூறுகையில், ‘கிளிஸ்டெர் ஹெர்பல்ஸை சிறப்பாக வரையறுக்க வேண்டுமென்றால் சிறந்த சுவை, மூலிகைகளின் நலனை வழங்கும் ஆம்வேயின் மூலிகை வாய் பராமரிப்பு தீர்வு என்று சொல்லலாம். பல செயல்களை புரியும் இந்த பற்பசையில் 11 உட்பொருள்களின் வளம் உள்ளது. மூலிகைகளின் நன்மையானது, கிருமிகளிடமிருந்து 12 மணி நேரம் பாதுகாப்பு மற்றும் புத்துணர்ச்சி சுவாசப் பலன்கள், மீள்தனிமமாக்கம் மற்றும் பற்களை வெள்ளையாக்குதல் ஆகிய உறுதிகளை அளிக்கிறது,’ என்றார்.

Tags : Amway Clinter Herbals ,
× RELATED சுற்றுலா பயணிகள் விசைப்படகில் சவாரி