×

ஆலங்குடி, கறம்பக்குடி பகுதியில் திமுக ஊராட்சி சபை கூட்டம்

ஆலங்குடி, ஜன.25: ஆலங்குடி அருகே திருவரங்குளம் மேற்கு ஒன்றியம், கரும்பிரான்கோட்டையில் திமுக சார்பாக ஊராட்சி சபை கூட்டம் நடந்தது.
 எம்எல்ஏ மெய்யநாதன் தலைமை வகித்தார். கூட்டத்தில், கஜா புயலால்  பாதிக்கப்பட்ட கரும்பிரான் கோட்டை ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமத்திற்கும்  முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து  விவசாயிகளுக்கும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். கல்விக்கடனை  தள்ளுபடி செய்ய வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு கடன்களை தள்ளுபடி செய்ய  வேண்டும். குடிநீர் வசதி ஏற்படுத்திய தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன. மேலும், கூட்டத்தில் கஜா புயலால்  பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க கோரியும் பெண்கள் மற்றும்  பொதுமக்கள் எம்எல்ஏ மெய்யநாதனிடம் மனு அளித்தனர்.கறம்பக்குடி: கறம்பக்குடி திமுக வடக்கு ஒன்றியத்தின் சார்பாக வடக்கு  ஒன்றியத்தில் உள்ள ராங்கியன்விடுதி, குளந்திரான்பட்டு, தீத்தான்விடு–்தி,  பிலாவிடுதி ஆகிய 4 ஊராட்சிகளில் திமுக ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது.  திமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் இளம்பரிதி தலைமை வகித்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.  புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் மாவட்ட, ஒன்றிய,  நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,meeting ,Panchayat Council ,Alangudi ,
× RELATED கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய...