×

காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம்

நாமக்கல், ஜன.24:  ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூரில், நகர காங்கிரஸ் கமிட்டி செயல் வீரர்கள் கூட்டம், தலைவர் சிங்காரம் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் கரியபெருமாள் வரவேற்று பேசினார். நகர செயலாளர்கள் வெங்கடாசலம், செங்கோடன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வெண்ணந்தூர் பேரூராட்சியை, தேர்வுநிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தவேண்டும். வீடுகள் மற்றும் வர்த்தக கட்டிடங்களுக்கு உயர்த்தப்பட்ட வரியை, பொதுமக்களின் நலன் கருதி குறைக்க வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாமக்கல் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் கந்தசாமி, தங்கவேல், கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : congressmen ,
× RELATED சேரி மொழி பேச்சுக்கு வருத்தம்...