×

தென்கொரியாவில் தொழில்நுட்பத்தின் உதவியால் தற்கொலையை தடுக்கும் முயற்சி : மக்கள் அமோக வரவேற்பு!!

தென்கொரியா : தென்கொரியாவில் தொழில்நுட்பத்தின் உதவியால் தற்கொலையை தடுக்கும் முயற்சியில் அந்நாட்டு மீட்புப் படையினர் இறங்கியுள்ளனர். 5 கோடி மக்கள் தொகை கொண்ட தென் கொரியாவில் ஆண்டுதோறும் 1000க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.குறிப்பாக கொரோனா பரவலுக்கு பிறகு 20 முதல் 30 வயது கொண்ட இளைஞர்களிடம் தற்கொலை எண்ணம் அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது.இதனை தடுக்கும் முயற்சியில் இறங்கிய அந்நாட்டு மீட்புப் படையினர் தொழில்நுட்பத்தின் உதவியை நாடினர். தென் கொரிய தலைநகர் சியோலில் தற்கொலை அதிகம் நிகழும் நீளமான பாலத்தில் பொருத்தப்பட்டு இருந்த சென்சார், சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் தற்கொலை செய்து கொண்ட சுமார் 2,800 பேரின் உடல் அசைவுகள், அவர்களின் செயல்பாடுகளை தொழில்நுட்ப வல்லுநர்கள் சேகரித்தனர்.அவற்றை அடிப்படையாக கொண்டு செயற்கை நுண்ணறிவு மூலம் அந்த பாலத்தின் மேலே செல்லும் மனிதர்களின் அசைவுகள் கண்காணிக்கப்படும்.அவை முன்னர் தற்கொலை செய்து கொண்டவர்களின் அசைவுகளை ஒத்து போயிருக்குமாயின் உடனடியாக மீட்புப் படையினருக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.சோதனை முயற்சியில் உள்ள இந்த தொழில்நுட்பம் அக்டோபர் மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதன் பிறகு தற்கொலைகளை பெரும் அளவு தவிர்க்க முடியும் என்று அந்நாட்டு மீட்புப் படையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். …

The post தென்கொரியாவில் தொழில்நுட்பத்தின் உதவியால் தற்கொலையை தடுக்கும் முயற்சி : மக்கள் அமோக வரவேற்பு!! appeared first on Dinakaran.

Tags : South Korea ,
× RELATED பேஸ்புக் மூலம் கடல் கடந்து காதல்:...