×

தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பவுர்ணமி கிரிவலம்

பாடாலூர்,ஜன,23:  பெரம்பலூர்  மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் வடபழனி என்ற ழைக்கப்படும் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் மலை மீது அமைந்து ள்ளது. இந்த  மலையை சுற்றி ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று கிரிவலம் நடை பெற்று  வருகிறது.
அதே போல் இந்த மாதமும் பவுர்ணமி கிரிவலம்  நடை பெற் றது. கிரிவலத்தை முன்னிட்டு மலைமீதுள்ள தண்டாயுதபாணி சுவாமிக்கு  பால், பன்னீர், சந்தனம்,குங்குமம், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால்  சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், மலை அடிவாரத்தில் அலங்கரிக்கப்பட்ட  முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் மலையை  சுற்றி அரோகரா, அரோகரா என்ற கோஷத்துடன் பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.  பின்னர் மலைக்கோவிலை சுற்றி வெள்ளி தேர் இழுத்து பக்தர்கள் சாமி தரிசனம்  செய்தனர்.  

Tags : Pandarini Giriavalam ,Thandayuthapani Swamy Temple ,
× RELATED பழநியில் சட்டக்கல்லூரி அமைக்க கோரிக்கை