9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்

தென்காசி, ஜன.23:  9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு அனைவருக்கும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேற்று முதல் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கி உள்ளனர். தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு  ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  ஆர்ப்பாட்டத்திற்கு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்கம் செந்தூர்பாண்டியன், அரசு ஊழியர் சங்கம் மல்லிகா தலைமை வகித்தனர். ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழு துரைசிங் கண்டன உரையாற்றினார். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் முருகன், ஊரக வளர்ச்சிதுறை சங்கம் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். கணிப்பொறி ஆசிரியர் கழக மாநில தலைவர் செல்வக்குமார், உயர்நிலை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் ஐயப்பன், தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம் சேகர், பட்டதாரி ஆசிரியர் கழகம் மாரியப்பன், கடையநல்லூர் அங்கன்வாடி பணியாளர் சங்கம் பொன்மலர், தென்காசி முருகம்மாள், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி ரவி, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ரசூல்அகமதுஇப்ராகிம், அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சலீம், சத்துணவு ஊழியர் சங்கம் கணபதி, ஊரகவளர்ச்சித்துறை ராஜசேகர், முதுநலை பட்டதாரி வைகுண்டசாமி, வருவாய்துறை ஜேசுராஜன் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட துணைத்தலைவர் பார்த்தசாரதி நன்றி கூறினார். ஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் காரணமாக தாலுகா அலுவலகம், யூனியன் அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால் வெறிச்சோடி காணப்பட்டு ஏராளமான பணிகள் பாதிக்கப்பட்டன.

   சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்பாட்டம் நடத்தினர்.  தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அருள்மாசிலாமணி, அரசு ஊழியர் சங்கம் பீட்டர், முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் செந்தில்குமார், தொடக்கபள்ளி ஆசிரியர் கூட்டணி அசோக், வருவாய்துறை திருமலைமுருகன் ஆகியோர் தலைமை வகித்தனர்.  ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த பசுபதி, ராஜையா, மோகன்ராஜ், குமரகுருபரன், ராஜேந்திரன்,வேல்முருகன், ராஜா, காமாட்சி, தர்மராஜ், ராமர் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியூறுத்தி பேசினர். ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  அரசு ஊழியர் சங்கசெயலாளர் வேல்ராஜன் நன்றி கூறினார்.   ஆலங்குளம்: ஆலங்குளம் ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பு நடந்த ஜாக்டோஜியோ ஆர்பாட்டத்திற்கு வட்டார கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கங்காதரன், ஆரோக்கியராசு தலைமை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர்கள் வேதமுத்து மோட்சகன், இம்மானுவேல், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலங்குளம் வட்டார ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு அந்தோணிசாமி, செந்தாமரை செல்வி, சரோஜா, சந்திரமோகன், மாநில உயர்மட்ட குழு மயில்ராஜ், கார்த்திக்குமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட துணை தலைவர் பழனி நன்றி கூறினார். ஆர்பாட்டத்தில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சேர்ந்த உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.  சிவகிரி: வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் வட்டார செயலாளர் ராமர் தலைமை வகித்தார். வாசுதேவநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் வட்டாரச் செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாவட்டச் செயலாளர் குமார் வரவேற்றார்.தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்டச் செயலாளர் செய்யது இப்ராஹிம் மூசா கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினார். மாவட்ட துணைச் செயலாளர் மருதுபாண்டியன், அரசு ஊழியர் சங்க வட்டாரப் பொறுப்பாளர் ராஜூ, ஆரம்பப் பள்ளி கூட்டமைப்பு வட்டாரத் தலைவர் ஜேம்ஸ் ஆரோக்கியராஜ், முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர்கலைச்செல்வி, சத்துணவு ஊழியர் சங்க பொறுப்பாளர் வாஞ்சி மைதீன், அரசு உதவி பெறும் பள்ளிகள் சங்க

நிர்வாகி பாலு, ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர் துரைப்பாண்டியன் மற்றும் சிவகிரி, கடையநல்லூர் தாலுகா பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் திரளாக கலந்துகொண்டனர்.

   நாங்குநேரி: நாங்குநேரி யூனியன் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ ஆர்பாட்டத்திற்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் ஜான் பாரதிதாசன், தமிழ்நாடு சத்துணவு பணியாளர் சங்க மாவட்ட துணை தலைவர் சுப்பிரமணியன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் செல்வராஜ், தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க வட்டார செயலாளர் ஐயப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணை தலைவர் லாசர் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை அலுவலர் சங்க வட்டார செயலாளர் வீரபத்திரன் நன்றி கூறினார்.

Related Stories: