×

ஜாக்டோ-ஜியோ ஆலோசனை கூட்டம்

நாமக்கல், ஜன.18: நாமக்கல் மாவட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் கூட்டம் நாமக்கல்லில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். ரவீந்திரன், ஜெகதீசன், மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செல்வகுமார் வரவேற்றார். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் முத்துசாமி சிறப்புரை ஆற்றினார். மாநில பொதுச்செயலாளர் செல்வராஜ் மற்றும் பொறுப்பாளர்கள் பேசினர். கூட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் துவங்கப்பட உள்ள எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை விதிகளுக்கு புறம்பாக பணிமாற்றம் செய்யப்படும்செயல்பாட்டை கைவிட வேண்டும், 3,500 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். மேலும் 3,500 சத்துணவு மையங்களை மூடும் திட்டத்தையும் கைவிட வலியுறுத்தி வரும் 22ம்தேதி முதல் நடைபெற உள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஜாக்டோ-ஜியோவினர் முழுமையாக கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டமைப்பின் பொருப்பாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.


Tags : Jacotto-Geo Consultation Meeting ,
× RELATED மாநில அளவிலான கைப்பந்து போட்டி