×

டாஸ்மாக் கடையை துளையிட்டு மதுபாட்டில் கொள்ளை

சென்னை, ஜன. 11: திருவள்ளூர் காக்களூர் பைபாஸ் சாலையில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும், மேற்பார்வையாளர் திருவள்ளூர் சண்முகம் மற்றும் விற்பனையாளர்கள்  வழக்கம் போல கடையை பூட்டி விட்டு சென்றனர். நேற்று காலை, அவ்வழியாக வாக்கிங் சென்றவர்கள் டாஸ்மாக் கடையின் பக்கவாட்டு சுவர் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல்  தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன், எஸ்.ஐ., சிவா தலைமையில் போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது, ஒரு நபர் கடைக்குள் உள்ளே செல்லும் அளவுக்கு சுவரில் துளை  போடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு மாவட்ட எஸ்.பி., பொன்னி, டிஎஸ்பி கங்காதரன் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்துச் சென்றனர். மோப்ப நாய் ரேம்போ  வரவைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. விசாரணையில் நேற்று வியாபாரமான ₹3 லட்சத்தை ஊழியர்கள் வீட்டுக்கு எடுத்து சென்று விட்டனர். கடைசியில் வியாபாரமான சில்லறை பணம் மட்டும்  கடையில் இருந்துள்ளது. இதனால் ஏமாற்றமடைந்த கொள்ளையர்கள், கடைக்குள் புகுந்து மது பாட்டில்களை மட்டும் கொள்ளையடித்து சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

Tags :
× RELATED செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூரில்...