இறைவனை தேடி மானூர் அருகே மக்கள் மறியல்

மானூர், ஜன. 10:  அழகியபாண்டியபுரம், நெல்லை - சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் உள்ளது. இங்கு பஸ் நிலையம், ஊரின் உள்பகுதியில் அமைந்துள்ளது. இந்த வழியாக செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் பெரும்பாலானவை, பஸ் நிலையத்திற்குள் வருவதில்லை. மெயின் ரோட்டில் இறக்கிவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் பஸ் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.  இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள், நேற்று காலை மெயின் ரோட்டுக்கு திரண்டு சென்று பஸ்களை சிறைபிடித்தனர். இதனால் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த மானூர் போலீசார் விரைந்து சென்று அவர்களை சமாதானப்படுத்தினர். அனைத்து பஸ்களும் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையேற்று மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Tags : Manoor ,God ,
× RELATED வாலிபர் அடித்து கொலை வழக்கில் கட்டிட...