×

இன்றைய மின்தடை

மதுரை, ஜன.8: கோ.புதூர் மற்றும் மகாத்மா காந்தி நகர் துணைமின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று நடப்பதால் பாரதி உலா ரோடு, வல்லபாய் ரோடு, ஜவஹர் ரோடு, பெசன்ட் ரோடு, சின்னசொக்கி குளம், டிஆர்ஓ காலனி தெற்கு, புது நத்தம் ரோடு, புதூர் வண்டிப்பாதை, பாலமந்திரம், ரத்தினசாமி நாடார் ரோடு, பிபி குளம் முதல் பாலமந்திரம் வரை, விசாலாட்சிபுரம், ஆத்திகுளம், டிஆர் காலனி தெற்கு, ரத்தினசாமி நாடார் ரோடு, நரிமேடு, கட்டபொம்மன் நகர், போஸ் வீதி, மீனாம்பாள்புரம், அழகர்கோவில் ரோடு, தமுக்கம் முதல் ஐடிஐ பஸ் ஸ்டாப் வரை ஆகிய பகுதிகளில் காலை இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.

இதே போல் மகாத்மா காந்தி நகர் துணை மின்நிலைய பகுதியில் விஸ்வநாதபுரம், மகாத்மா காந்தி நகர், முல்லை நகர், சிவக்காடு, கிருஷ்ணபுரம் காலனி, ஆணையூர், பணங்காடி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என கோ.புதூர் துணை மின்நிலைய செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.


Tags :
× RELATED மதுரையில் தொடர் சோதனை ஸ்மோக் பிஸ்கெட்...