×

மதுகுடிக்கும்போது தகராறு 4 வாலிபர்கள் கைது

காலாப்பட்டு, ஜன. 8: கோட்டக்குப்பம் எம்.என். நகரை சேர்ந்த இப்ராஹிம்  மகன் சாகுல் அமீது (21). இவரும், இவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த மணி  (21), மற்றொரு சாகுல் அமீது (21), தினேஷ் (22), மணிகண்டன் (21) ஆகிய 5 பேரும்  நேற்று கோட்டக்குப்பம் பகுதியில மது குடித்துள்ளனர்.
அப்போது, வாய்த்தகராறு  ஏற்பட்டதில் மணி, சாகுல் அமீது, தினேஷ், மணிகண்டன் ஆகிய 4 பேரும்  சேர்ந்த சாகுல் அமீதை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் தனக்கு ஆதரவாக 2 பேரை  அழைத்து வந்து தட்டு கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் ஷாகுல்  அழைத்து வந்த 2 பேரையும் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த 3  பேரும் புதுவை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.  இதுகுறித்து ஷாகுல் அமீது கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புகார்  அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்த 4 பேரையும் கைது  செய்து வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : teenagers ,
× RELATED படுக்கையில் இறந்து கிடந்த 2 வாலிபர்கள்