×

சிறுவாச்சூர் கிராமத்தில் ரூ.1.24 கோடியில் 1.20 கி.மீ நீள சாலை அமைக்கும் பணி ஆய்வு விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

பெரம்பலூர்,ஜன.4: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை மூலம் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து  சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் செல்லும் சாலை மேம்பாட்டு பணிகளை  கலெக்டர் சாந்தா ஆய்வு செய்தார்.சென்னை- திருச்சி  தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில்  செல்லும் பக்தர்களின் வசதிக்காக நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.1.24 கோடியில் 1.20 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலை, தமிழக அரசின் நிதி மூலம் சீரமைக்கப்பட்டு வருகிறது. இச்சாலையில் 3 இடங்களில் சேதமடைந்த பழைய கல்பாலங்களுக்கு பதிலாக புதிய பாலங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி  இச்சாலையில் நடந்து வரும் மேம்பாட்டு பணிகளை  பெரம்பலூர் கலெக்டர் சாந்தா பார்வையிட்டார். அப்போது சிறந்த ஆன்மிக தலமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்கும் சிறுவாச்சூருக்கு வரும் பொதுமக்களின் நலன்கருதி  நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை மேம்பாட்டு பணிகளை  உயர்ந்த தரத்துடன் விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் சாலையோரங்களில்  பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட்டு வரும் பேவர் பிளாக் பதிக்கும்  பணி, மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை கலெக்டர் சாந்தா ஆய்வு செய்தார். திட்ட இயக்குனர் ஸ்ரீதர், கோட்ட பொறியாளர்  சக்திவேல், ஊராட்சிகள் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பாரதிதாசன், உதவி  கோட்ட பொறியாளர் பாபுராமன், உதவி பொறியாளர் ஜெயலட்சுமி உடனிருந்தனர்.

Tags : Chavavachur village ,
× RELATED பைக் மீது டிப்பர் லாரி மோதல்: ஒருவர் பலி