×

போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சரக டிஐஜியிடம் மனு

தஞ்சை, ஜன. 4: போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபரிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தஞ்சை சரக டிஐஜியிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
தஞ்சை  சரக டிஐஜி லோகநாதனிடம் நகர மதிமுக பொருளாளர் பசுபதி தலைமையில்  சந்திரசேகரன் உள்பட 5க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்தனர். அதில்  அவர்கள் கூறியிருப்பதாவது: தஞ்சை நிர்மலா நகரில் பழைய வீட்டுவசதி வாரிய  குடியிருப்பு அருகே உள்ள 10,000 சதுரடி மனையை அபகரிக்கும் நோக்கில் போலியாக  ஆவணம் தயார் செய்துள்ளது. இதையடுத்து அந்த இடத்தில் சந்திரசேகரன் தற்காலிக  கொட்டகை அமைத்து அதில் தங்கியிருந்தார். அந்த கும்பல் போலீசார் மற்றும்  அரசு அதிகாரிகள் துணையோடு கொட்டகை போட்டு தங்கியுள்ள சந்திரசேகரனை மிரட்டி  கொட்டகையை காலி செய்ய வலியுறுத்தி வருகிறது. மேலும் இடத்தின்  உரிமையாளர்களுக்கு ஆதரவாக வருபவர்களை கொலை செய்வதாகவும் மிரட்டல் விடுத்து  வருகிறது. இதேபோல் அந்த கும்பல், தஞ்சை புறவழிச்சாலை மற்றும் நகரங்களை  ஒட்டியுள்ள பகுதிகளில் காலியாக பயன்படுத்தாமல் கிடக்கும் மனைகளை கண்டறிந்து  போலியாக ஆவணங்கள் தயாரித்து அதனை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு  வருகிறது. எனவே இதுகுறித்து முறையாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட கும்பல்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : petitioner ,DIGI ,land ,
× RELATED தனியார் தோட்ட வன நிலம் ஆக்கிரமிக்க...