×

கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது 25 கிலோ பறிமுதல்

தஞ்சை, ஜன. 4: தஞ்சை நகரில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து தஞ்சை டவுன் டிஎஸ்பி ரவிச்சந்திரன் மேற்பார்வையில் கிழக்கு இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தஞ்சை சீனிவாசம்பிள்ளை சாலையில் சந்தேகத்தின்பேரில் நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் தஞ்சை பழைய மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜ் மகன் கோபி என்ற கோபிநாத் (20) என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவரிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் தஞ்சை மிஷன் சர்ச் சாலையில் ரோந்து சென்றபோது அங்கு கஞ்சா விற்பனை செய்ததாக கீழவண்டிக்கார தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கார்த்திக் (22) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சை அடுத்த கூடலூர் பகுதியில் தாலுகா இன்ஸ்பெக்டர் பசுபதி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா வைத்திருந்த கூடலூர் பெரிய தெருவை சேர்ந்த வெள்ளை கோபி என்ற கோபிநாத் (32) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் இருந்து 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : persons ,
× RELATED தருமபுர ஆதீனத்தை மிரட்டி பணம் பறித்த...