×

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் தண்ணீர் இல்லாததால் கரும்பு விளைச்சல் பாதிப்பு

பாப்பிரெட்டிப்பட்டி, ஜன.3: பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் தண்ணீர் இல்லாமல் செங்கரும்பு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், விலை உயர வாய்ப்புள்ளதால் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனர். நடப்பாண்டு பருமழை பொய்த்து போனதால் போதிய தண்ணீரின்றி, கரும்புகள் போதிய வளர்ச்சி இல்லாமல் உள்ளது. இதனால் உரிய விலை கிடைக்காது என விவசாயிகள் ேவதனை அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த ஆண்டு பருமழை பெய்ததால், செங்கரும்பு விளைச்சல் அதிகமாக இருந்தது. நடப்பாண்டில் மழை பொய்த்து போனதால், கரும்பு சாகுபடியில் பெரும்பாலான விவசாயிகள் ஈடுபாடு காட்டவில்லை. கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் சிலர் தங்களது தோட்டத்திற்கு, டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வாங்கி தங்களது தோட்டங்களுக்கு பாய்ச்சி கரும்புகளை காப்பாற்றி வருகின்றனர். இதனால் கரும்பு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு தண்ணீர் இருந்ததால், கரும்பு சுமார் 8அடி வரை வளர்ந்தது. மழையின்மையால், விளைச்சல் பாதித்து 5அடி வரை மட்டுமே வளர்ந்துள்ளது. இதனால் நடப்பாண்டு கரும்பின் விலை உயர வாய்ப்பு உள்ளது,’ என்றனர்.

Tags : poppytipatti area ,
× RELATED பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் தண்ணீரின்றி காய்ந்த தென்னை மரங்கள்