×

திருத்துறைப்பூண்டி அருகே பயிர் காப்பீட்டு தொகை கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி, டிச.28: திருத்துறைப்பூண்டி அருகே பயிர் காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் டத்தினர்.திருத்துறைப்பூண்டி அருகே எழிலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 2016-17ம் ஆண்டில் 382 பேருக்கு 80 சதவிகிதமும், 148 பேருக்கு 19 சதவிகிதமும் பயிர் காப்பீட்டு தொகை வந்தது. இதிலுள்ள குளறுபடிகளை நீக்கி அனைவருக்கும் ஒரே மாதிரியான பயிர் காப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று ஏற்கனவே விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் மீண்டும் பயிர் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து எழிலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன் நேற்று விவசாயிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயி சிவதாஸ் தலைமை வகித்தார். கடந்த 2016-17ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும், கடன் சங்கம் வளர்ச்சி பெற அனைத்து விவசாயிகளும் சேமிப்பு கணக்கு துவங்க அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், வக்கீல் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tiruthuraibandi ,
× RELATED திருத்துறைப்பூண்டி அருகே லாரி விபத்தில் டிரைவர் படுகாயம்