×

பாலமேடு பேரூராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டிற்கு தடை

அலங்காநல்லூர், டிச.28: மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சி பகுதியில் அரசு தடைசெய்துள்ள பிளாஸ்டி பொருள் உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்கு முற்றிலும் தடை அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.இதனால் 15 வார்டு பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் ஆகியவற்றில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக தவிர்க்க வலியுறுத்தி நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதனை மீறி விநியோகிப்பவர்கள், பயன்படுத்துவபவர்கள் மீது தமிழ்நாடு அரசின் பிளாஸ்டிக் தடை அறிவிப்பு சட்டத்தின்படி அபராதமும் அதிகபட்ச தண்டனையும் வழங்க பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது.நேற்று முதல் பேரூராட்சி செயல் அலுவலர் பூங்கொடிமுருகு தலைமையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இங்கு ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளதால் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கான தடை கடுமையாக பின்பற்றப்படும் என்று பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


Tags : Palamadu ,panchayat area ,
× RELATED சேகல், கொருக்கை ஊராட்சி பகுதியில் இல்லம் தேடிக் கல்வி திட்ட துவக்க விழா