×

காரைக்குடியில் விஏஓக்கள் ஆர்ப்பாட்டம்

காரைக்குடி, டிச. 28:  காரைக்குடி வருவாய் அலுவலகத்துக்கு முன்பு பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி விஏஓகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காரைக்குடி வருவாய் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட தலைவர் உதயகுமார் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் கலீல் ரஹ்மான் முன்னிலை வகித்தார். இணையதள வசதி வழங்க வேண்டும். விஏஓக்களின் அதிகாரத்தை பறிக்க கூடாது. விவசாயிகளை அடங்கல் பெற அலையவிடக் கூடாது. அடங்கலை இலவசமாக வழங்க வேண்டும். விஏஓ அலுவலகங்களுக்கு கழிப்பறை வசதி செய்து தரவேண்டும். மாவட்ட மாறுதல் வழங்கவேண்டும். விஏஓக்கள் கல்வித் தகுதியை பட்டப்படிப்பு ஆக்கிட வேண்டும். விஏஓக்களுக்கு என தனித்துறை உருவாக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொருளாளர் கார்த்திகேயன் நன்றி -கூறினார்.

Tags : VAOs ,Karaikudi ,
× RELATED உடல் பருமன் குறைய சிறுதானியங்கள் சாப்பிடுங்க