×

செக் மோசடி வழக்கில் தனியார் பஸ் உரிமையாளருக்கு சிறை

உசிலம்பட்டி, டிச. 28: செக் மோசடி வழக்கில் தனியார் பஸ் உரிமையாளருக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை விதித்து உசிலம்பட்டி கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அண்ணாநகரைச் சேர்ந்தவர் ஒச்சாத்தேவர் மகன் ராமர். இவர் மதுரை பைபாஸ் சாலையில் இருக்கும் தனியார்பஸ் உரிமையாளர் அர்ச்சுணன் மகன் பாண்டியராஜ் என்பவருக்கு ரூ.5 லட்சம் கடனாக கொடுத்துள்ளார். அதற்கு ஈடாக காசோலை ஒன்றை பாண்டியராஜிடம் பெற்றதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில் கொடுத்த பணத்தை பலமுறை கேட்டும் பாண்டியராஜ் பணம் தர காலதாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து ராமர் உசிலம்பட்டி ஜெ.எம்.1 கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது, இந்த வழக்கில் ராமர் சார்பில் வழக்கறிஞர் ராமச்சந்திரபிரதீப் வாதாடினார்.வழக்கை விசாரித்த நீதிபதி உதயவேலவன் பணம் பெற்றுக்கொண்டு செக் மோசடி செய்த பாண்டியராஜிற்கு அவர் பெற்ற கடனை ஒரு மாத காலத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும். மேலும் செய்த குற்றத்திற்காக ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு கூறினார்.

Tags : Prisoner ,bus owner ,Czech ,
× RELATED ‘மலையாள நாடகத்தை ஒளிபரப்பு..’ கைதி...