×

சேலையூரில் பரபரப்பு எஸ்.ஐ மனைவி திடீர் தற்கொலை

சென்னை, டிச. 28: சென்னை தாம்பரம், மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜெய்கணேஷ் (35), சேலையூர் காவல் நிலைய சட்டம், ஒழுங்கு உதவி ஆய்வாளர். உள்ளார். இவரது மனைவி பிரவீனா (27). இவர்களுக்கு 9 வயதில் பிரஜித் என்ற ஒரு மகன் உள்ளான். பிரவீனாவின் பெற்றோர் கடந்த 15 ஆண்டுக்கு முன் தற்கொலை செய்துகொண்டனர். எனவே, பிரவீனாவை அவரது அத்தை கலா வளர்த்து வந்தார்.  இந்நிலையில் ஜெய்கணேஷிற்கும், பிரவீனாவிற்கும் காதல் ஏற்பட்டு பின்னர் கடந்த 2009ம் ஆண்டு மதுரையில் திருமணம் நடந்தது. ஜெய்கணேஷ், கடந்த 2013ம் ஆண்டு போலீசாக வேலைக்கு சேர்ந்து, பின்னர் 2016ம் ஆண்டு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றார். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சேலையூர் காவல் நிலையத்தில் சட்டம், ஒழுங்கு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.

இவர் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி தராமலும், சம்பள பணத்தை சரிவர கொடுக்காமலும் இருந்து வந்ததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் ஜெய் கணேஷிற்கு பிறந்தநாள் என்பதால் வீட்டில் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர்.பின்னர், ஜெய்கணேஷ் வெளியில் சென்று விட்டார். வீட்டில் மகனுடன் பிரவீனா இருந்துள்ளார். மகன் பிரஜித் வெளியில் விளையாட சென்றுவிட்டான். அப்போது பிரவீனா வீட்டின் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வெளியில் விளையாட சென்ற பிரஜித் வீட்டிற்கு வந்தபோது பிரவீனா தூக்கில் தொங்குவதை பார்த்து அலறியுள்ளான். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து ஜெய்கணேஷிற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலறிந்து சேலையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக, அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags : Sleeper SI ,suicide ,
× RELATED ஆங்கில பள்ளி மோகம் தற்கொலைக்கு சமம்: என்சிஇஆர்டி தலைவர் சொல்கிறார்