×

புதுவையில் 8ம் தேதி பந்த்

புதுச்சேரி, டிச. 28: புதுவையில் 8ம் தேதி மாநிலம் தழுவிய பந்த் மற்றும் 8, 9ம் தேதிகளில் நாடு தழுவிய பொதுவேலைநிறுத்தத்தையும் வெற்றிகரமாக நடத்துவது என அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும், தொழிலாளர் சட்டங்களை முழுமையாக அமுலாக்க வேண்டும். சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க கூடாது, விவசாயத்தை பாதுகாத்திட வேண்டும். சிறுவணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க கூடாது, சிறு, குறு தொழில்களை பாதுகாத்திட வேண்டும். அனைவருக்கும் ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் வரும் 8, 9ம் தேதிகளில் 48 மணி நேர பொதுவேலைநிறுத்த முழுஅடைப்பு போராட்டம் நடக்கிறது.

புதுச்சேரியில் ஏஐடியுசி, ஐஎன்டியுசி, சிஐடியு, எல்பிஎப், ஏஐசிசிடியு, எல்எல்எப் ஆகிய தொழிற்சங்கங்கள் சார்பில் போராட்டம் நடைபெறுகிறது. இப்போராட்டத்தை விளக்கி புதுவை காமராஜர் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று கருத்தரங்கம் நடந்தது. ஐஎன்டியுசி மாநில தலைவர் ரவிச்சந்திரன், ஏஐடியுசி தலைவர் தினேஷ் பொன்னையா, சிஐடியு தலைவர் முருகன், தொமுச தலைவர் அண்ணா அடைக்கலம், ஏஐசிசிடியு தலைவர் மோதிலால் ஆகியோர் தலைமை தாங்கினர். ஏஐடியுசி பொதுச்செயலாளர் சேதுசெல்வம், ஐஎன்டியுசி பொதுச்செயலாளர் ஞானசேகரன், சிஐடியு செயலாளர் சீனுவாசன், தொமுச முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி, ஏஐசிசிடியு புருசோத்தமன், எல்எல்எப் துணை செயலாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு மாநிலத்தை சேர்ந்த தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், சிஐடியு பொதுச்செயலாளர் சுகுமாறன், ஐஎன்டியுசி துணை தலைவர் முனுசாமி, முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், ஏஐசிசிடியு தலைவர் சோ.பாலசுப்பிரமணியம், வி.சிறுத்தைகள் மாநில பொருளாளர் தமிழ்மாறன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். புதுச்சேரியில் 8ம் தேதி மாநிலம் தழுவிய பந்த் போராட்டத்தையும், 8, 9ம் தேதிகளில் பொதுவேலைநிறுத்தத்தையும் அதற்கான மக்கள் ஆதரவு பிரசாரத்தையும் வெற்றிகரமாக நடத்துவது என
கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


Tags : New Delhi ,
× RELATED தேர்தலையொட்டி கெத்து காட்டும்...