அரிவாளை காட்டி மக்களை மிரட்டிய 2 வாலிபர்கள் கைது

புதுச்சேரி, டிச. 25: புதுவை பாரதி வீதி-தியாக முதலியார் வீதி சந்திப்பில் நேற்று முன்தினம் மதியம் 2 வாலிபர்கள் கையில் வீச்சரிவாளுடன் நின்று ெகாண்டு அவ்வழியே செல்லும் பொதுமக்களை மிரட்டிக் கொண்டிருந்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள், பெரியகடை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த 2 வாலிபர்களையும் பிடித்தனர். விசாரணையில் அவர்கள், சின்னையாபுரம் ராஜகோபால் தோட்டத்தை சேர்ந்த தேவா (20), அசோக்நகர் பாரதிதாசன் வீதியை சேர்ந்த ரஞ்சித் (20) என்பதும், பெயிண்டிங் தொழிலாளிகள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது ெசய்த போலீசார், அவர்களிடம் இருந்து 2 வீச்சரிவாள்களை கைப்பற்றினர். பின்னர், மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : youths ,Aravali ,
× RELATED பெரும்பாக்கத்தில் நள்ளிரவு பயங்கரம் 2 வாலிபர்கள் சரமாரி வெட்டி கொலை