×

ஒப்பாரி வைத்து கதறி அழுத பெண்கள் கலசபாக்கம் அருகே பரபரப்பு எம்ஜிஆர் நினைவு நாள் நிகழ்ச்சியில்

கலசபாக்கம், டிச.25: எம்ஜிஆர் 31வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி கலசபாக்கம் அருகே பெண்கள் ஒப்பாரி வைத்து பாட்டு பாடி கதறி அழுதனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 31வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தில் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுகவினர் நேற்று எம்எல்ஏ அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக சென்றனர். கலசபாக்கம் பஸ் நிறுத்தத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த எம்ஜிஆரின் உருவபடத்திற்கு எம்எல்ஏ பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அப்போது கலசபாக்கம் கூட்ரோடு பூண்டி, மேல்வில்வராயநல்லூர் கூட்ரோடு, தென்மகாதேவமங்கலம் ஆகிய கிராமங்களில் இருந்த எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்தார். தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது பெண்கள் எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாறு குறித்து பாட்டு பாடி ஒப்பாரி வைத்து கதறி அழுதனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பெண்கள் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இதேபோல் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம், புதுப்பாளையம், ஜமுனாமரத்தூர் போளூர் ஒன்றியங்களில் அதிமுகவினர் எம்ஜிஆரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட அதிமுக துணை செயலாளர் எல்.என்.துரை பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி அவைத்தலைவர் கருணாமூர்த்தி எல்.என்.வெங்கடேசன் உள்ளிட்ட அதிமுகவினர் பங்கேற்றனர்.

Tags : MGR day show ,women ,garland ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...