×

மினிபேருந்து நிலைய பின்புறம் கடைகள் ஆக்கிரமிப்பால் பயணிகள் கடும் அவதி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


கரூர்,  டிச.21:  மினிபேருந்து நிலையத்தின் பின்புறம் கடைகள் ஆக்கிரமிப்பினால்  பயணிகள் செல்ல முடியாமல் அவதிப்படுவதால் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப் பட்டது. கரூர் பேருந்து நிலையத்தின் அருகிலேயே மினிபேருந்துநிலையம்  உள்ளது. மினிபேருந்து க்கு என தனியாக கரூரில் மட்டுமே பேருந்து நிலையம்  அமைக்கப்பட்டிருக்கிறது. மற்ற மாவட்டங்களில் பேருந்து நிலையத்திற்கு  உள்ளேயே ஒருபகுதியில் மினிபேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. எனினும்  மினிபேருந்து நிலையத்தின் பின்புறத்தில் பயணிகள் செல்ல முடியாத அளவுக்கு  ஆக்கிரமிப்புகள் உள்ளன. கடைகளையும், தள்ளுவண்டிகளையும் போட்டு பயணிகள்  நடந்துசெல்லவே சிரமப்படுகின்றனர். சைக்கிளில் வருபவர்கள் வேறு வழியாக  சுற்றிக் கொண்டு போகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,  பேருந்து நிலையத்தில் நாளுக்குநாள் ஆக்கிர மிப்புகள் அதிகமாகிக் கொண்டே  போகிறது. தற்போது மினிபேருந்து நிலையத்தின் பின்புறத்தில் அதிக அளவில்  கடைகள் போடப்பட்டுள்ளன. கடைகளை முறைப்படுத்த நகராட்சி எந்த நடவடிக்கை
யும்  எடுப்பதில்லை. கடைகளுக்கு அடையாள அட்டை கொடுத்து பயணிகள் நடமாடும் இடம்  அல்லாத பகுதியில்தான் தள்ளுவண்டியோ, தரைக்கடையோ அமைக்க வேண்டும். ஆனால்  இஷ்டத்திற்கு கடைகளை போட்டு வைத்துள்ளனர். இதனால் நகராட்சிக்குவருமானவது  வருகிறதா என்றால் இல்லை. எத்தனை கடைகள் உள்ளன ஒரு கடைக்கு எவ்வளவு வாடகை  வசூல் செய்கின்றனர்.

இதுநகராட்சி நிர்வாகத்திற்குபோகிறதா என்பதுபற்றி  எதுவும் தெரியாத நிலைதான் உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நடத்தியிருந்தால்  கவுன்சிலர்கள் கேள்வி கேட்பார்கள். தேர்தலையும் நடத்தாமல் இருக்கின்றனர்.  தனி அதிகாரிகள் தான் நிர்வாகத்தை நடத்து கின்றனர். இவர்களுக்கும் மக்கள்  தொடர்பு கிடையாது. எந்த தகவலையும் அறிவிப்ப தில்லை. வரியை கட்டவேண்டும் என  அறிவிப்பு மட்டும் செய்கின்றனர். அதைத்தவிர எந்த வேலையும் உருப்படியாக  செய்வதில்லை. கேட்க ஆள் இல்லாத நிர்வாகமாக கரூர் நகராட்சி நிர்வாகம்  மாறிவிட்டது. கலெக்டர் போன்ற உயர் அதி காரிகள் தலையிட்டு இதுபோன்ற  பிரச்சனைகளில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : backpackers ,passengers ,mini-boutique ,
× RELATED அந்தமான் சென்ற விமானம் மோசமான வானிலை...