×

ஊமாரெட்டியூர் ஐயப்பன் கோயில் சபரிமலை யாத்திரை உற்சவம்

பவானி, டிச. 20: அம்மாபேட்டை அருகேயுள்ள ஊமாரெட்டியூரில் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் சபரிமலை யாத்திரை உற்சவ விழா நேற்று நடந்தது.இவ்விழாவை முன்னிட்டு கலைமாமணி வீரமணி ராஜூவின் ஆன்மீக இன்னிசை கச்சேரி நடைபெற்றது. காவிரி ஆற்றிலிருந்து ஐய்யப்பனுக்கு ஆராட்டு நிகழ்ச்சியும், வான வேடிக்கைகளுடன் சுவாமி ஊர்வலம் நடந்தன. தொடர்ந்து, நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அம்மாபேட்டை, குருவரெட்டியூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : pilgrimage festival ,Ummeriyur Ayyappan Temple Sabarimala ,
× RELATED குருசுமலை திருப்பயண விழா துவங்கியது:...