×

மாயனூர் பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

கரூர், டிச.20: மாயனூர் பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. கரூர்  அருகே உள்ள மாயனூரில் காவிரியாற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது.  மாயனூர், சீலப்பிள்ளையார் புதுார் பகுதியை இணைக்கும் வகையில் கதவணையில்  பாலமும் கட்டப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. மாயனூர் தண்ணீர்  பாலம் அருகே அம்மா பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பூங்காவில்  மீன் அருங்காட்சியகம், சிறுவர்கள் விளையாட விளையாட்டு உபகரணங்கள்,  பூச்செடிகள், நீருற்றுகள், ஊஞ்சல் என அமைக்கப்பட்டுள்ளன.
விடுமுறை  தினங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. திருச்சி, நாமக்கல்  மாவட்டத்தில் இருந்தும் பாலம் வழியாக பயணிகள் வந்து செல்கின்றனர். கரூர்  மாவட்டத்தில் மாயனூர் ரயில்வே கேட்டில் இருந்து செல்லும் சாலையை செப்பனிட  வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

Tags : Meynoor Park ,
× RELATED கோடைவிடுமுறையையொட்டி மாயனூர்...