×

தாமல், கிளார் பகுதியில் இன்று குறை கேட்கும் முகாம்

காஞ்சிபுரம், டிச.20: காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி மக்களின் குறைகளைக் கேட்க தொகுதி முழுவதும் பொதுமக்களை தேடிச் சென்று குறைகளைத் தீர்க்க காஞ்சிபுரம் எம்எல்ஏ  எழிலரசன் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை  மனுக்கைளை பெற்று வருகிறார்.
 அதன் தொடர்ச்சியாக இன்று  காலை 9 மணிக்கு தாமல். 10 மணிக்கு கிளார், 10.30 மணிக்கு பெரும்பாக்கம், 11 மணிக்கு முத்துவேடு, 11.30 மணிக்கு விஷார், 12 மணிக்கு நரப்பாக்கம், 12.30 மணிக்கு விப்பேடு, 1 மணிக்கு மேல்கதிர்பூர், 1.30 மணிக்கு திருப்பருத்திக்குன்றம் பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெறுகிறார்.  

மாலை 3 மணிக்கு சிறுகாவேரிப்பாக்கம், 3.30 மணிக்கு மேல்ஒட்டிவாக்கம், 4 மணிக்கு முசரவாக்கம், 5 மணிக்கு திருப்புட்குழி பகுதியிலும் மனுக்களை பெறுகிறார். நாளை (டிச.21, வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு கீழ்அம்பி, 10 மணிக்கு கருப்படிதட்டடை, 10.30 மணிக்கு திம்மசமுத்திரம், 11 மணிக்கு ஆரியப் பெரும்பாக்கம், 11.30 மணிக்கு கூரம், 12 மணிக்கு உழக்கோல்பட்டு, 12.30 மணிக்கு சிறுணைபெருகல், 1 மணிக்கு முட்டவாக்கம், 1.30 மணிக்கு கீழ்கதிர்பூரில் மனுக்களை பெறுகிறார். மாலை 3 மணிக்கு புத்தேரியிலும், 4 மணிக்கு கோனேரிக்குப்பத்திலும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார். இந்த முகாமில் பொதுமக்கள் தங்கள் தேவைகளை, குறைகளை, கோரிக்கைகளை எழுத்து பூர்வமாக வழங்கிட வேண்டும். தொடர் நடவடிக்கைக்கு ஏதுவாக மனுவை நகல் எடுத்து அதில் தொலைபேசி எண் குறிப்பிட்டு மனுக்களை வழங்கினால் உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைக்க ஏதுவாக இருக்கும் என்று எம்எல்ஏ எழிலரசன் தெரிவித்துள்ளார்.


Tags : area ,Clar ,
× RELATED மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில்...