×

பாப்பிரெட்டிப்பட்டி அருகே அரசு பஸ்சின் டயர் கழன்று ஓடியது பயணிகள்தப்பினர்

பாப்பிரெட்டிப்பட்டி, டிச.19: பாப்பிரெட்டிப்பட்டி அருகே அரசு பஸ்சின் டயர் கழன்று ஓடியதால், பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக 40 பயணிகள் உயிர் தப்பினர்.
சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து 40 பயணிகளுடன், நேற்றிரவு 8.30 மணிக்கு அரசு பஸ் புறப்பட்டது. பாப்பிரெட்டிப்பட்டி அருகே எச்.புதுப்பட்டிக்கு பஸ் சென்றபோது, பஸ்சின் பின்புற டயர்களில் ஒன்று கழன்று, சாலையில் தனியே ஓடி சாலையோர பள்ளத்தில் விழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பஸ் டிரைவர், சாமர்த்தியமாக செயல்பட்டு பஸ்சை சாலையோரம் நிறுத்தினார். இதனால், பஸ்சில் பயணம் செய்த 40 பயணிகளும், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து தகவல் அறிந்த எ.பள்ளிப்பட்டி ேபாலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பயணிகளை வேறு பஸ்சில்  அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் சேலம்- வேலூர் சாலையில் சுமார் 10 நிமிடம்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



Tags : Passengers ,Pappirippatti ,
× RELATED டெல்லி – வாரணாசி விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்