×

வேடசந்தூர் அருகே விபத்தில் இருவர் பலி

வேடசந்தூர், டிச. 19: வேடசந்தூர் அருகே விபத்தில் 2 பேர் பலியாயினர். வேடசந்தூர், குங்குமகாளியம்மன் கோயிலை சேர்ந்தவர் மூர்த்தி(27). அதே தெருவை சேர்ந்தவர் சங்கீதா(35). இருவரும் டூவீலரில் லந்தக்கோட்டை அருகே கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனர். ராமநாதபுரம் அருகே சென்றபோது டூவீலர் மீது டிராக்டர் நேருக்கு நேர் மோதியது.

இதில் மூர்த்தி, சங்கீதா இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். டிராக்டர் டிரைவர் தப்பி ஓடினார். டிஎஸ்பி சிவக்குமார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக, வேடசந்தூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எரியோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : crash ,Vedassandur ,
× RELATED டெல்லி மருத்துவமனை தீ விபத்தில் 7...