×

கிராம அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற போராட்டம்

கோவை, டிச. 19: கோவையில் அகில இந்திய கிராம அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் கமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.  கோவை கூட்செட் ரோட்டில் உள்ள தலைமை தபால்நிலையத்தில் நடந்த போராட்டத்தில் கோட்ட செயலாளர் ஜீவா தலைமை வகித்தார். ேகாட்ட பொருளாளர் புஷ்பா, சிவக்குமார் உள்பட பலர் கலந்துக்கொண்டனர். இதில், கமிேலஷ் சந்திரா கமிட்டி அறிக்கையை அமல்படுத்த வேண்டும். இஎஸ்ஐ, பி.எப் திட்டங்கள் அமல்படுத்த வேண்டும். ஊழியர்களின் குழந்தைகளுக்கு கல்வி நிதியுதவி வழங்க வேண்டும். கிளை அஞ்சலகங்களின் ேவலை நேரத்தை 8 மணி நேரமாக உயர்த்த வேண்டும். ஜிடிஎஸ் ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர் அந்தஸ்து வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நேற்று
முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இதில், கோவை மாவட்ட அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர், ஏஐஜிடிஎஸ்யு, என்யுஜிடிஎஸ் உள்ளிட்ட சங்கத்தை சேர்ந்த 200 பேர் பங்கேற்றுள்ளனர். கிராம அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக கிராமப்புறங்களில் தபால் சேவை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags : Gram ,postmen ,strike ,
× RELATED சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின்...