×

மேகதாது அணை விவகாரம் ஓய்வு பெற்ற காவலர்கள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, டிச.18: கர்நாடகாவில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி தர்மபுரி மாவட்ட ஓய்வுபெற்ற காவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தர்மபுரி மாவட்ட ஓய்வுபெற்ற காவலர் நலச்சங்கம் சார்பில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், அணை கட்ட அனுமதி வழங்கிய மத்திய அரசை கண்டித்தும், கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தர்மபுரி மாவட்ட ஓய்வுபெற்ற காவலர் நலச்சங்கம் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் சின்னசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் பிரான்சிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் திருமால் வரவேற்றார். பொருளாளர் கிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் சதாசிவம் ஆகியோர் பேசினர். தேவராஜ், தாமோதரன், சிவலிங்கம், சங்கர்லிங்கம், விஜயன் மற்றும் ஓய்வு பெற்ற காவலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Meghatadu ,guards ,
× RELATED மத்தியப்பிரதேசத்தில் ஹேண்ட் பிரேக்...