×

வெண்ணாற்றில் இருந்து சாக்கு மூட்டையில் மணல் கடத்திய வாகனம் பறிமுதல்

திருக்காட்டுப்பள்ளி, டிச. 18: வெண்ணாற்றில் இருந்து சாக்கு மூட்டைகளில் மணல் கடத்த பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
தஞ்சை மாவட்டம் கல்லணை அருகே பாதிரக்குடியில் தோகூர் சப்இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வெண்ணாறு கரையில் நின்ற காரை சோதனையிடுவதற்காக சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் காரில் இருந்து இறங்கி டிரைவர் ஓடிவிட்டார். பின்னர் காரை சோதனையிட்டபோது சாக்கு மூட்டைகளில் மணல் கடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து காரை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து வழக்குப்பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.வாலிபர் தற்கொலை: பாபநாசம் அருகே அய்யம்பேட்டை அடுத்த புரசக்குடியை சேர்ந்தவர் ரமேஷ் (38). இவர் உடல்நல குறைவால் அவதிப்பட்டார். இதனால் மனமுடைந்து ரமேஷ் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மின்கம்பத்தில் பைக் மோதி வாலிபர் பலி:பாபநாசம் அடுத்த அய்யம்பேட்டையை சேர்ந்த கல்லூரி மாணவர் யாசர் அரபாத் (20). சக்கராப்பள்ளியை சேர்ந்தவர் முகமது அனாஸ் (21). இருவரும் நேற்று முன்தினம் இரவு அய்யம்பேட்டையில் இருந்து பாபநாசம் நோக்கி கும்பகோணம்- தஞ்சாவூர் மெயின் சாலையில் பைக்கில் சென்றனர். அய்யம்பேட்டை அடுத்த சரபோஜிராஜபுரத்தில் சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் பைக் மோதியது. இதில் பைக்கை ஓட்டி சென்ற முகமது அனாஸ், யாசர் அரபாத் ஆகியோர் படுகாயமடைந்தனர்.இதையடுத்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி யாசர் அரபாத் இறந்தார். முகமது அனாஸ் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED பாபநாசம் அருகே பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் கைது