×

நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில பொதுக்குழு கூட்டம் சேலத்தில் இன்று நடக்கிறது

சேலம், டிச.16:தமிழ்நாடு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் சேலத்தில் இன்று நடக்கிறது. சேலம் புது பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள பொன்னுசாமி கவுண்டர் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கிறது. காலை 9 மணிக்கு தொடங்கும் பொதுக்குழு கூட்டத்திற்கு, மாநில தலைவர் வெங்கடேஷ் தலைமை வகிக்கிறார். மாநில கவுரவ ஆலோசகர் மோகன் சங்கர் கொடியேற்றி வைக்கிறார். கூட்டத்தில், மாநில பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் சங்கத்தின் வருங்கால செயல்திட்டங்கள் குறித்தும், மாநில பொருளாளர் பழனியப்பன், சங்கத்தின் பொருளாதாரம் குறித்தும் பேசுகின்றனர். அகில இந்திய நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணா, தொழில் வர்த்தக சங்க பொதுச் செயலாளர் ஜெயசீலன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசுகின்றனர். சேலம் மாவட்ட செயலாளர் அருணாசலம் தீர்மானங்களை முன்மொழிகிறார். விழாக்குழு தலைவர் பிரசாத் நன்றி கூறுகிறார். இதில், மாநிலம் முழுவதும் உள்ள நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

Tags : Consortium of Distributors Distributors ,General Meeting Meeting ,State ,
× RELATED வீட்டு வாசலில் உறங்கியவர்கள் மீது...