சுற்றுலா பயணிகள் வருகை சரிவு

பென்னாகரம், டிச.16: தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலாதலத்துக்கு, விடுமுறை நாளான நேற்று குறைந்த அளவே சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வுகள் நடந்து வருவதால், பெரும்பாலான பெற்றோர் தங்களுடைய குழந்தைகளை விட்டு விட்டு வெளியூர் செல்வதை தவிர்த்து வருகின்றனர். மேலும், பனிக்காலம் தொடங்கியுள்ளதால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. உள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தோர் மட்டுமே வந்து செல்கின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஓரளவு கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


× RELATED மூடிக்கிடந்த தொட்டில் குழந்தை மையம் திறப்பு