×

மடத்துக்குளத்தில் திமுக உறுப்பினர் அட்டை விநியோகம்

உடுமலை, டிச. 16: மடத்துக்குளம் ஒன்றிய திமுக சார்பில், புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கோவை மாவட்ட இளைஞரணி செயலாளர் கோட்டை அப்பாஸ், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், ஒன்றிய செயலாளரும் எம்எல்ஏ.,வுமான ஜெயராமகிருஷ்ணன் ஆகியோர் உறுப்பினர் அட்டைகளை வழங்கினர். 4 பேரூராட்சி, 11 ஊராட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களுக்கு அட்டை வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் முபாரக் அலி, மாநில பொறியாளர் அணி துணை தலைவர் சண்முகசுந்தரம், ஒன்றிய பொருளாளர் ஈஸ்வரன் மற்றும் பேரூர், கிளைக்கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags : DMK ,Madathukulam ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி