×

சூரியன் எப்.எம் 91.9 ல் ‘மினிமம் பேச்சு - மேக்ஸிமம் பாட்டு’ நிகழ்ச்சி நாளை முதல் ஒலிபரப்பு

கோவை, டிச. 16:  தமிழகத்தின் நம்பர் 1 எப்.எம்., சூரியன் எப்.எம் 91.9, தனது நேயர்களுக்கு புதுமையான பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது, ‘’மினிமம் பேச்சு - மேக்ஸிமம் பாட்டு’’ என்னும் தலைப்பில் புதுமையான நிகழ்ச்சியை அறிமுகம் செய்துள்ளது. இந்நிகழ்ச்சி, டிசம்பர் 17ம்தேதி (நாளை) முதல், 2019 ஜனவரி 17ம்தேதி வரை ஒரு மாத காலத்திற்கு ஒலிபரப்பு செய்யப்படுகிறது.
நேயர்கள் திரும்ப திரும்ப கேட்க விரும்பும் இசைஞானி இளையராஜா உள்ளிட்ட பிரபல இசையமைப்பாளர்களின் இசையில் வந்த இடைக்கால பாடல்களை அதிகம் கேட்கலாம். திரை இசையில் மனம் மகிழ, நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் தங்களது பேச்சை குறைத்து, பாடல்களை அதிகம் வழங்க உள்ளனர். சூரியன் எப்.எம் 91.9ல் இந்த புதுமையான நிகழ்ச்சி நேயர்களுக்கு நான்-ஸ்டாப் ட்ரீட் ஆக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. கேளுங்க... கேளுங்க... கேட்டுக்கிட்டே இருங்க... சூரியன் எப்.எம் 91.9.

Tags : Sun ,talk ,
× RELATED சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக...