ஈரோடு, மே 27: மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று முன் தினம் ஏலம் மூலமாக ரூ. 44.92 லட்சம் மதிப்பிலான எள் விற்பனையானது. இந்த, ஏலத்தில் பங்கேற்க சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 449 மூட்டைகள் எள்ளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், கருப்பு ரகம் 1 கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ. 116.69க்கும், அதிகபட்சமாக ரூ. 145.99க்கும், சராசரி விலையாக ரூ. 130.99க்கும் விற்பனையானது.
இதேபோல, சிவப்பு ரக எள் 1 கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ. 106.19க்கும், அதிகபட்சமாக ரூ. 143.99க்கும், சராசரி விலையாக ரூ. 126.19க்கும் விற்பனையானது. வெள்ளை ரக எள் 1 கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ. 117.89க்கும், அதிகபட்சமாக ரூ. 143.29க்கும், சராசரி விலையாக ரூ. 130.99க்கும் விற்பனையானது. இந்த ஏலத்தில் மொத்தம் 33 ஆயிரத்து 545 கிலோ எடையிலான எள் ரூ. 44 லட்சத்து 92 ஆயிரத்து 904க்கு விற்பனையானதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
The post ரூ.44.92 லட்சத்துக்கு எள் விற்பனை appeared first on Dinakaran.