×

ஈரோட்டில் நாட்டு சர்க்கரை மூட்டைக்கு ரூ.60 சரிவு

 

ஈரோடு, மே 26: ஈரோடு அடுத்த சித்தோடு வெல்ல மார்க்கெட்டில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று ஏலம் மூலம் வெல்ல மூட்டைகள் (30 கிலோ) விற்பனை செய்யப்படும். இதன்படி, இந்த வாரம் கூடிய மார்க்கெட்டில் நாட்டு சர்க்கரை 3,000 மூட்டையும், உருண்டை வெல்லம் 3,200 மூட்டையும், அச்சு வெல்லம் 150 மூட்டையும் வரத்தானது.

இதில், நாட்டுச்சர்க்கரை மூட்டை ஒன்று ரூ.1,200 முதல் ரூ.1,280 வரையும், உருண்டை வெல்லம் ரூ.1,300 முதல் ரூ.1,380 வரையும், அச்சு வெல்லம் ரூ.1,400 முதல் ரூ.1,450 வரை என்ற விலையில் விற்பனையானது. கடந்த வாரத்தை போலவே நாட்டு சர்க்கரை, உருண்டை வெல்லம் வரத்தானது. அச்சு வெல்லம் மட்டும் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால், இந்த வாரம் நாட்டு மூட்டைக்கு ரூ.60 வரை குறைந்தும், உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மூட்டைக்கு ரூ.30 வரை உயர்ந்தும் விற்பனையானதாக மார்க்கெட் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

The post ஈரோட்டில் நாட்டு சர்க்கரை மூட்டைக்கு ரூ.60 சரிவு appeared first on Dinakaran.

Tags : Erode ,Chithod Vela Market ,
× RELATED சூதாடிய 5 பேர் கைது