×

வி.சி. கட்சி ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம், டிச. 16: பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து நேற்று முன்தினம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணை செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் புரட்சிமணி, மங்கலம்பேட்டை நகர செயலாளர் அம்பேத், விருத்தாசலம் ஒன்றிய செயலாளர் சுப்பு ஜோதி, கல்வி மற்றும் பொருளாதார விழிப்புணர்வு மாவட்ட துணை அமைப்பாளர் செல்வா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து எச்.ராஜாவின் உருவபொம்மையை எரிப்பதற்கு முயற்சித்தனர். அதற்குள் தகவலறிந்து வந்த மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.நெய்வேலி: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை அவதூறாக பேசியதாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் எச்.ராஜாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நெய்வேலி என்எல்சி ஆர்ச் கேட் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் கோவிந்தன் தலைமை தாங்கினார்.மாநில கொள்கை பரப்பு செயலாளர் திருமாறன் கண்டன உரையாற்றினார். மாவட்ட செயலாளர் கருப்புசாமி, பொருளாளர் மருதமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Vici Party ,demonstration ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்