×

9 கிலோ பறிமுதல் வண்டியூர் கண்மாய்க் கரைகளில் உடைப்பு

மதுரை, டிச. 6: மதுரை வண்டியூர் கண்மாய்க்கரையில் 3 இடங்களில் ஏற்பட்டுள்ள உடைப்பினால், குடியிருப்பு பகுதிகளி–்ல் தண்ணீர் புகுந்தது.
 மதுரை வண்டியூர் கண்மாயில் தண்ணீர் வெளியேறும் இடத்தில் ஷட்டர் போட்டு, மணல் மூடைகளால் தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர். இதனால் தண்ணீர் வெளியேற வழியின்றி லேக் ஏரியா பகுதியில் 3 இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்,‘‘பொதுப்பணித்துறையினர் கண்மாய் கரையை பலப்படுத்தாமல் தண்ணீர் தேக்கியுள்ளனர். இதனால் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு வருகிறது.  வண்டியூர் கண்மாய் மேடான பகுதி. பள்ளமான லேக் ஏரியாவிற்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

சத்திரப்பட்டி, கள்ளந்திரி வாய்க்கால்களில் நீர் வரத்து அதிகமானால் வண்டியூர் கண்மாய்க்கு வந்து சேர்கிறது. அந்த தண்ணீர் நிரம்பி, உடைப்புகள் ஏற்பட்டு  லேக்ஏரியா, டிடிசி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. தேங்கும் இந்த தண்ணீரால், கொசுத்தொல்லை, பாம்பு, பூச்சி வீடுகளுக்குள் வருகிறது. மாவட்ட மற்றும் பொதுப்பணித்துறை நிர்வாகங்கள் கண்மாய்க் கரை உடைப்புகளை சரி செய்து, குடியிருப்பு பகுதிகளுக்குள் தேங்கியுள்ள தண்ணீரையும் வெளியேறற வேண்டும்’’ என்றனர்.

Tags : banks ,
× RELATED இந்தியாவின் 17 வங்கிகளில் மோசடி செய்து...