×

நீலத்தநல்லூரில் 7ம் தேதி மக்கள் குறைதீர் முகாம்

கும்பகோணம், டிச.5: கும்பகோணம் அடுத்த நீலத்தநல்லூரில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 7ம் தேதி நடக்கிறது. கும்பகோணம் தாசில்தார் (பொ) ஜானகிராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கும்பகோணம் அடுத்த நீலத்தநல்லூர் கிராமத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் வரும் 7ம் தேதி நடக்கிறது. இதில் பொதுமக்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான சாதி, வருமான சான்று, முதல் பட்டதாரி சான்று, இருப்பிட சான்று, பிறப்பு, இறப்புக்கான சான்றுகளுக்கான மனுக்களை உரிய ஆவணங்களுடன் இணைத்து கொடுத்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : camp ,
× RELATED சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்