×

ஆஸ்துமா அவஸ்தைக்கு தீர்வு

ஆஸ்துமா நோயை பற்றியும், அதனை குணப்படுத்துவதை பற்றியும் விருத்தாசலத்தை சேர்ந்த ஹோமியோ டாக்டர் முத்தையன் எம்.டி. (ஹோமியோ) அளித்த பேட்டிஆஸ்துமா என்றால் என்ன? ஆஸ்துமா என்பது நுரையீரல்களை மீண்டும் பாதிக்கக்கூடிய ஒரு நோய். ஆஸ்துமா தாக்குதலின் போது நுரையீரலில் உள்ள சுவாசக் குழாய்கள் சுருங்குவதாலும், அதிகமான சளி சுரப்பதினாலும் தொந்தரவுகள் ஏற்படுகின்றன.ஆஸ்துமாவின் அறிகுறிகள் என்ன?ஆஸ்துமா நோயின் அறிகுறிகள் பொதுவாக பகலில் இருப்பதை விட இரவில்தான் அதிகரித்து காணப்படுகின்றது.
1. இருமல்: ஆஸ்துமா இருமல் சாதாரண இருமலைப் போல இல்லாமல் தொடர்ச்சியாகவும் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதிகரித்தும் காணப்படலாம்.
2. இளைப்பு (WHEEZING) சுவாசம் இயல்பாக இல்லாமல் மூச்சு இழுப்பதற்கும் விடுவதற்கும் சிரமமாக இருக்கும்.
3. சத்தம்: மூச்சு விடும் போது விசிலடிப்பது போன்ற சத்தம் நெஞ்சில் இருந்து ஏற்படும்.
4. இறுக்கம்: நெஞ்சில் யாரோ ஏறி இருப்பது போன்றோ பாரம் இருப்பது போன்ற உணர்வு.
ஆஸ்துமாவை பூரணமாக குணமாக்க முடியுமா?
ஹோமியோ தனித்தன்மை மருந்துகள் மற்றும் கூட்டு வைத்திய முறையினால் இயற்கையான உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதின் மூலம் ஆஸ்துமாவின் ஆரம்ப நிலையில் விரைவாகவும், பூரணமாகவும், நாள்பட்ட மற்றும் முற்றிய நிலைகளில் படிப்படியாகவும், ஆஸ்துமா நோயின் தாக்கத்தில் இருந்து முழுமையாக விடுபட முடியும். ஆஸ்துமா நோயின் தாக்கத்திற்கு ஏற்ப மருந்துகளை குறிப்பிட்ட காலம் மட்டும் சாப்பிட்டு விட்டு பின்பு நிறுத்தி விடலாம். எந்தவிதமான பின் விளைவுகளும் பக்க விளைவுகளும் இல்லாத இந்த கூட்டு வைத்திய முறையில் பரம்பரை நோயாக இருந்தாலும் அல்லல்படுத்தும் ஆஸ்துமாவில் இருந்து நிரந்தரமாக விடுதலைபெற முடியும். மேலும் ஆஸ்துமாவை பற்றிய ஏதேனும் சந்தேகம் இருந்தால் டாக்டர் முத்தையன் எம்.டி. (ஹோமியோ)., சிவா ஹெல்த் கிளினிக் & ஆராய்ச்சி மையம், 15, மேலக்கோட்டை வீதி, விருத்தாசலம். போன்: 04143 -& 230832, 231956, 90475 60630 என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம்.


Tags :
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு அமைக்கும் பணிக்கு மக்கள் எதிர்ப்பு