×

டாஸ்மாக் பணியாளரிடம் ரூ.2.53 லட்சம் கொள்ளை மணப்பாறை அருகே மர்ம நபர்கள் துணிகரம்

மணப்பாறை, நவ.30: மணப்பாறை அருகே டாஸ்மாக் ஊழியரை அாிவாளால் வெட்டி ரூ.2.53 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வளநாடு கைகாட்டி அருகே வெள்ளையக்கோன்பட்டி என்ற இடத்தில் சமீபத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. டாஸ்மாக் கடை திறப்பதற்கு அப்பகுதியை சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த டாஸ்மாக் கடையில் தொட்டியம் சிறுநாராயணபுரத்தை சேர்ந்த மகேந்திரன்(48) சூபர்வைசராகவும், மணப்பாறை வடுகப்பட்டியை சேர்ந்த செல்வம், பாரதிநகரை சேர்ந்த ஜெய்சங்கர், வடக்கு அம்மாபட்டியை சேர்ந்த மாரியப்பன் ஆகியோர் விற்பனையாளராகவும் பணியாற்றுகின்றனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 10 மணிக்கு மறுநாள் வங்கியில் செலுத்துவதற்காக விற்பனை பணம் ரூ. 2லட்சத்து 53 ஆயிரத்து 510ஐ எடுத்துக்கொண்டு கடையை பூட்டிவிட்டு இரண்டு இரு சக்கர வாகனத்தில் பணியாளர்கள் நால்வரும் வீட்டுக்கு சென்று ெகாண்டிருந்தனர். ஒரு பைக்கில் சூபர்வைசர் மகேந்திரன், செல்வமும்,  மற்றொரு வண்டியில் ஜெய்சங்கர், மாரியப்பனும் சென்றனர். அப்போது முன்னால் மகேந்திரன் சென்ற பைக்கை பைக்கில் வந்த 4 மர்ம ஆசாமிகள் வழிமறித்து, மகேந்திரன் தலையில் கட்டையால் அடித்தும், அாிவாளால் வெட்டியும் அவர் வைத்திருந்த ரூ.2.53 லட்சத்தை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பி விட்டனர். பின்னால் உட்கார்ந்திருந்த செல்வம் இறங்கி ஓடிவிட்டார்.

காயமடைந்த மகேந்திரன் சத்தம் கேட்டு பின்னால் மற்றொரு டூவீலரில் வந்து கொண்டிருந்த ஜெய்சங்கரும், மாரியப்பனும் அங்கே வந்தனர்.அவர்கள் இருவரும், மகேந்திரனை மணப்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து தகவலறிந்த வளநாடு போலீசார் மற்றும் மணப்பாறை இன்ஸ்பெக்டர் மனோகரன் ஆகியோர் கொள்ளை நடந்த இடத்திற்கு வந்து பார்வையிட்டு வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Taskmill ,
× RELATED அனுமதியின்றி டாஸ்மாக் மதுபானம் விற்றவரிடம் விசாரணை