×

அனுமதியின்றி டாஸ்மாக் மதுபானம் விற்றவரிடம் விசாரணை

கும்பகோணம், மே 7: கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலை காவல் நிலையத்திற்குட்ப்பட்ட பகுதியில் அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து சுவாமிமலை போலீசார் திருவலஞ்சுழி பகுதியில் சோதனை செய்தபோது, திருவலஞ்சுழி, விசிபி நகரை சேர்ந்த பாஸ்கர் (30) என்பவர் காலை 7 மணியளவில் அனுமதியின்றி டாஸ்மாக் மதுபானம் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து பாஸ்கரிடம் விசாரித்து வருகின்றனர்.

Tags : soldier ,
× RELATED தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு!