×

திருமானூர் அருகே குண்டும், குழியுமான மண் சாலையை தார்சாலையாக மாற்ற கோரிக்கை

அரியலூர்,நவ.30:  அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்தில் விளாகம் செம்பியக்குடி சாலை உள்ளது. இந்த சாலை பல கிராமங்களை திருமழபாடி புள்ளம்பாடி நெடுஞ்சாலையுடன் இணைக்கும் முக்கிய சாலையாகும். இந்நிலையில் இந்த விளாகம் செம்பியக்குடி சாலை கடந்த 9 வருடங்களுக்கு முன்பு போடப்பட்டதால் இந்த தார் சாலை சேதமடைந்தது. இந்நிலையில் இந்த கிராமப்புற சாலையை புதிதாக போடப்படுவதற்காக, தமிழ்நாடு கிராம புறச் சாலை மேம்பாட்டு திட்டத்தில் சுமார் ரூ.97லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது.  கடந்த ஏப்ரல் மாதம் வேலை துவங்கிஜூன் மாதத்தில் தார் சாலை போட்டு முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் இந்த தார் சாலை ஏப்ரல்  மாதம் தோண்டப்பட்டு ஒன்ற்றை ஜல்லி போடப்பட்டதோடு சரி, இதுநாள் வரையில் எந்த வேலையும் நடைபெறாமல் அப்படியே கிடக்கிறது. இதனால் குண்டும், குழியுமாக இருந்த இந்த தார் சாலை தற்போது சுமார் ஏழு மாதங்களாக மோசமான மண் சாலையாக மாறியுள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் மண் சாலையாக மாறிய இந்த சாலையில் மிகவும் சிரமத்துடன் பயணிக்கின்றனர். எனவே அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் வேலை நடைபெறவில்லை.  இனியும் தாமதப்படுத்தாமல் தார்சாலையை விரைவில் செப்பனிட பாதிக்கப்பட்டுள்ள பல கிராம மக்களை ஒன்று திரட்டி போராடுவதை தவிர வேறு வழியில்லை   என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : mud road ,Tirumannur ,Tiruniyur ,
× RELATED ஜமுனாமரத்தூர் அருகே தார்சாலை போட்டு 40...