×

நாகர்கோவிலில் வீடுபுகுந்து திருடிய பிரபல கொள்ளையன் கைது

நாகர்கோவில், நவ. 29:  நாகர்கோவிலில் வீடு புகுந்து திருடிய பிரபல  கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து போலீசார் 33 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.  குமரி மாவட்டத்தில் வழிப்பறி சம்பவங்கள், வீடு புகுந்து திருட்டு தொடர்ந்து நடந்து வருகின்றன. திருடர்களை பிடிக்க கோட்டாறு போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையில் தனிப்படை அமைத்து மாவட்ட எஸ்பி நாத் உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சந்தேகத்தின்பேரில் சிடிஎம்புரத்தை சேர்ந்த செல்வன் என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், செல்வனுக்கு பல்வேறு திருட்டு சம்பவங்களில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

 மேல் விசாரணையில் கோட்டார் பகுதியை சேர்ந்த ஆறுமுகம்பிள்ளை, வட்டவிளை பகுதியை சேர்ந்த தர்ஷினி ஆகியோரது வீட்டின் பூட்டை உடைத்து அங்கிருந்த நகைகளை செல்வன் திருடி இருப்பது தெரியவந்தது. மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறுத்தி இருந்த வாகனங்களில் பேட்டரிகளை திருடி இருப்பதும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். செல்வனிடம் இருந்து 33 பவுன் நகை, 6 பட்டுச்சேலைகள், 3 செல்போன்கள் மற்றும் 9 பேட்டரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட செல்வனுக்கு உதவி செய்தவர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செல்வன் முதலில் கட்டிட தொழில் செய்து வந்துள்ளார். அப்போது சாலையோரம் நிறுத்தி இருக்கும் வகனங்களில் உள்ள பேட்டரிகளை திருடி விற்பனை செய்து வந்துள்ளார். பணம் அதிகமாக வந்ததை தொடர்ந்து வீடு புகுந்து நகை திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது கோட்டார் காவல் நிைலயத்தில் 2, ஆசாரிபள்ளத்தில் 1, நேசமணிநகரில் 2 திருட்டு வழக்குகள் உள்ளன.

Tags : pirate ,house ,Nagercoil ,
× RELATED கொளுத்தும் கோடை வெயில்; முக்கடல் அணை நீர்மட்டம் 0.9 அடியாக சரிந்தது