×

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள்

காஞ்சிபுரம், நவ.29:  காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு  அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி நிலை முகவர் (பிஎல்ஏ) மற்றும் வாக்குச்சாவடி நிலை  அலுவலர்கள் (பிஎல்ஓ) உடன் நேர்காணல் நிகழ்த்துமாறு இந்திய துணை தேர்தல் ஆணையர் காணொலிக்காட்சியில் தெரிவித்திருந்தார்.
அதன்படி நேற்று  அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் கலந்தாய்வு மற்றும் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் 2019  தொடர்பாக அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பெறப்பட்ட படிவங்களின் மீதான தொடர் முன்னேற்றப்பணிகள் குறித்து கலெக்டர் பொன்னையா  ஆய்வு செய்தார்.

இந்தக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சார்பாக ஆலந்தூர் எம்எல்ஏ தா.மோ.அன்பரசன்,  காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், திமுக  தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், ஒன்றிய செயலாளர் சிறுவேடல் செல்வம், மற்றும் அதிமுக மத்திய மாவட்ட செயலாளர் ஆறுமுகம்,  செய்யூர் முன்னாள்  எம்எல்ஏ ராஜீ,  காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் ஜீ.வி.மதியழகன், வக்கீல் சுந்தரமூர்த்தி, இந்திய  கம்யூனிஸ்ட் சார்பில் பி.வி.சீனிவாசன், தேமுதிக சார்பில் ஆசூர் கன்னியப்பன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மேலும்.  கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, சப் கலெக்டர் சரவணன், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்  (தேர்தல்) ரவிச்சந்திரன், மதுராந்தகம் வருவாய் கோட்ட அலுவலர் மாலதி, தாம்பரம் வருவாய் கோட்ட அலுவலர் சந்திரசேகர் மற்றும் வாக்காளர் பதிவு  அலுவலர்கள்-வட்டாட்சியர்கள் ஆகியோரும் உடனிருந்தனர்.

பெட்டிச்செய்தி:   1 லட்சத்திற்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் தா.மோ.அன்பரசன் குற்றச்சாட்டு காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர்  பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக்  கூட்டத்தில் கலந்துகொண்ட காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், ஆலந்தூர் தொகுதி எம்எல்ஏவுமான தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம்  மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளிலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் உள்ளனர் என்று குற்றம்சாட்டிப் பேசினார்.
 இவர்களை நீக்க மாவட்ட நிர்வாகம் உரிய  நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தார்.

Tags :
× RELATED பெரும்புதூர் – வாலாஜா இடையே...