×

சுக்காலியூர் பகுதியில் மின் விளக்கு

கரூர், நவ. 29: கரூர் சுக்காலியூர் பகுதியில் இருந்து மதுரை பைபாஸ் சாலைக்கு செல்லும் வழியில் மின்விளக்குகள் பொருத்த வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர். கரூர் சுக்காலியூர் பகுதியில் இருந்து கருப்பம்பாளையம், செட்டிபாளையம் மற்றும் மதுரை பைபாஸ் சாலை போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கான சாலை உள்ளது. ஆபத்தான வளைவுகளுடன் இந்த சாலை உள்ளது. தினமும், சுக்காலியூர் உட்பட இரண்டு புறங்களிலும் இருந்தும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையின் வழியாக செல்கின்றன. மேலும், பொதுமக்களும் அதிகளவு நடந்து செல்கின்றனர். ஆனால், இந்த சாலையில் மின்கம்பங்கள் இருந்தும் மின்விளக்குகள் பொருத்தப்படாத காரணத்தினால் இரவு நேரங்களில் இந்த சாலை இருட்டாகவே காணப்படுகிறது.

இதனால், சாலையில் நடந்து செல்பவர்கள் விஷ ஐந்துகளின் பயத்துடன் செல்வது ஒரு புறம் இருந்தாலும், அதிக வேகமாக வரும் வாகனங்களாலும் அடிக்கடி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மின்விளக்கு வசதி இல்லாததால் அடிக்கடி வாகன விபத்துக்களும் இந்த சாலையில் நடைபெற்று வருகிறது. எனவே, இந்த பகுதியை பார்வையிட்டு மின் விளக்கு வசதி ஏற்படுத்துவதற்கான பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : area ,Sukaliyur ,
× RELATED குஜராத் ராஜ்கோட் பகுதியில் வணிக வளாக...